Thursday, August 20, 2015

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.........

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற பழமொழிக்கு பொருத்தமானவர்கள் என்று சொல்லப்போனால்  பாவப்பட்ட   ஜீவன்களாகிய ரேஷன்கடை விற்பனையாளர்கள்தான். யார்யாரோ செய்யும் தில்லுமுல்லுகளுக்குக்கான பழியையும் தண்டனையும் ஏற்றுக்கொள்ளும் வாயில்லா ஜீவன்கள் இவர்கள்.

சகட்டுமேனிக்கு  கடைக்காரனை “ திருட்டு பயலுக..... ஒரு கிலோவுக்கு நூறு கிராம் திருடுரான். புழு, வண்டோட பொருளை போடரான் என திட்டுவோம். நாம். ஆனால்  ஏன் கிலோவுக்கு நூறு கிராம்  திருடுகிறான்?  வண்டு புழு உள்ள பொருளை ஏன் விற்கிறான் என்று யோசிப்பதில்லை.

பொது விநியோக திட்டம் எந்த சட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது?, சட்டம் என்ன சொல்லுகிறது?  நம் உரிமை என்ன? தவறு செய்பவர்கள் யார்? என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்குவதே இந்த தொடர்பதிவின் நோக்கம்.

மீண்டும் சந்திப்போம்



No comments:

Post a Comment